நடுக்கடலில் மயங்கி விழ்ந்து மீனவர் உயிரிழப்பு!

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் நடுக்கடலில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அலெக்சாண்டர் செபஸ்தியான் (வயது 69) என்பவரே உயிரிழந்தவராவார்.
குருநகர் கடற்கரையில் இருந்து கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு குறித்த நபர் உட்பட 7 பேர் மண்டைதீவுக் கடலுக்கு மீன்பிடிக்குச் சென்றுள்ளனர்.
கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது குறித்த நபர் கடலுக்குள் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சக மீனவர்கள் அவரை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த வைத்தியர் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இது தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
Related posts:
பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!
இராஜாங்க அமைச்சுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில் வெளியீடு!
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு – 83 இராஜதந்...
|
|