தொழுநோயை கட்டுப்படுத்த புதிய பிரிவு!
Saturday, May 14th, 2016
தொழுநோய் கட்டுப்பாடு தொடர்பாக புதிய பிரிவொன்றை அமைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளடக்கி புதிய பிரிவை மாவட்ட மட்டத்தில் அமைப்பதுடன், இங்கிலாந்து தொழுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆதவரை இதற்கு பெற்றுகொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந் நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணையகம் தொடர்பாக வெளிநாடுகள் குற்றம் சாட்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். மருந்துகள் பதிவு செய்தல் தொடர்பாக அதில் மாபியா ஒன்று செயல்படுவதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துவருவதாகவும் சுகாதார அமைச்சில் இடம்பெற்று விஷேட கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
.
Related posts:
வொக்ஸ்வெகன் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
நேற்றும் ஆயிரத்திற்கும் குறைவானோருக்கு தொற்றுறுதி!
மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முற்படுவோரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தனியார் பேருந்து உரிமையா...
|
|
|


