தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளான அனைத்துலக தொழிலாளர் தினம் இன்று!

Wednesday, May 1st, 2024

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது.

1886 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் கூடிய தொழிலாளர்கள் வேலை நேரத்தை 8 மணித்தியாலங்களாக வரையறுக்குமாறு கோரி முழக்கமிட்டனர்.

பணிப்பகிஷ்கரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேராட்டத்தில் முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்ததுடன் மூன்றாவது நாளில் அந்த எண்ணிக்கை 65,000 ஆக அதிகரித்தது.

முதலாளிமாரின் வழிநடத்தலில் ஆயுதம் தாங்கிய காவல்துறை தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து மே மாதம் 4ஆம் திகதி தொழிலாளர்கள் ஹேமார்கட் சதுக்கத்தில் அணி திரண்டனர்.

காவல்துறையினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்ற போது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்தார்.

இந்தப் போராட்டம் மோதலாக உருவெடுத்ததுடன் ஆறு காவல்துறை உத்தியோகத்தர்கள் பலியானதை அடுத்து அது மேலும் உக்கிரமடைந்தது. இந்த மோதலில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை இன்றும் உறுதியாக கூற முடியாது.

8 மணித்தியால கடமை நேரத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்தவர்களை எப்போதும் நினைவுகூர வேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1889 ஆம் ஆண்டு தீர்மானித்தது.

அதற்கமைய ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - தொற்...
ரஷ்யா - உக்ரைன் யுத்தம் - நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!
கடன் தொடர்பில் ஆலோசனை குழு நியமிக்க 3 வார அவகாசம் தேவை - வரியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை – நிதி அமை...