பொலித்தீனுக்கான தடை தென்மராட்சியில் தீவிரம்  – மக்கள் வரவேற்பு!

Sunday, January 7th, 2018

தென்மராட்சி வர்த்தக நிலையங்களில் விற்ப்பனை செய்யப்படுகின்ற தடை செய்யப்படுகின்ற சொப்பிங் பைகள் உட்பட பொலித்தீன் வகைகள் கடந்த இரு நாட்களாக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றை  விற்ப்பனை செய்பவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மக்களின் வரவேற்ப்பைப்பெற்றுள்ளது.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனையைக்கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட வகைப்பொலித்தீனுக்கு அரசு கடந்த செப்டெம்பர் மாதம் தடைவிதித்திருந்தது. எனினும் வர்த்தகர்களின் வேண்டுகோளின் பிரகாரம் விற்றுத்தீர்ப்பதற்காக டிசம்பர் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதன்படி கடந்த முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் தடைசெய்யப்பட்டது. எனினும் பெரும்பாலான இடங்களில் பொலித்தீன் பாவனை தொடர்கிறது. அதனைக்கட்டப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தென்மராட்சியிலேயே இதற்கான முதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் தடைசெய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்கள் வணிக நிலையங்களில் உள்ளனவா என்கிற சோதனை நடவடிக்கைகையை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். அப்படி வைத்திருப்பவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றச்சூழலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கம் பொலித்தீனைக்கட்டுப்படுத்துவதில் தென்மராட்சி நீண்டகாலமாகக்காட்டி வரும் ஆர்வத்தையும் முன்மாதிரிச் செயற்பாட்டையும் மக்கள் வெகுவாகப்பாராட்டியுள்ளனர்.

Related posts:

ஒரே நாடு ஒரே நீதி - நாட்டில் எந்தவொரு நபரும் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் இன்றி வாழ்வதற்கான சூழ்நிலை...
நடளாவிய ரீதியில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி - சுகாதார அமைச்சின் தொற்று நோ...
40,000 மெட்ரிக் தொன் உரத்தை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது - நாளைமுதல் நாடளாவிய ரீதியில் விநியோக...