தொல் திருமாளவன், வேல்முருகனைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

Tuesday, March 28th, 2017

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந் இலங்கை செல்வதற்குக் எதிர்ப்புத் தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரைக் கண்டித்து நேற்று (27)  பிற்பகல்-03 மணியளவில் நல்லூரில்   ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நல்லூர் பின் வீதியில் திலீபன் நினைவிடத்திலிருந்து நல்லூர் முன்றல் வரை ஊர்வலமாகச் சென்று பின்னர் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘எமது புனித மண்ணைக் காணத் துடிக்கும் கலைஞனைத் தடுக்க நீங்கள் யார்?’,  ‘கலைஞர்களைக் கலைஞராகப் பாருங்கள் அவர்களை அரசியல் வாதிகளாகப் பார்க்காதீர்கள்’ , கலைஞர்களைக் கலைஞனாக வாழவிடு’, உள்ளிட்ட பல சுலோகங்களைத்  தாங்கி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிச் சில நிமிடங்களில் அங்கு வந்த தமிழ் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டத்தை மேலும் நடாத்த விடாது தடுத்து நிறுத்தினர்.  இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்

Related posts: