தொல்புரம் சிவபூமி முதியோரில்லத்தில் இரு புதிய கட்டடங்கள் திறப்பு!
Saturday, February 18th, 2017
யாழ். தொல்புரம் சிவபூமி முதியோரில்லம் ஆரம்பமாகிப் பத்தாவது ஆண்டு பூர்த்தியாவதை ஒட்டிப் புதிய கட்டடத் திறப்பு விழா கடந்த வியாழக்கிழமை(16) இடம்பெற்றுள்ளது.
சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் மூத்தோர்களைப் பராமரிப்பதற்காகப் பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரு புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. குறித்த திறப்பு விழாவில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

Related posts:
வித்தியா கொலை வழக்கு - பூபாலசிங்கம் இந்திரகுமார் மீண்டும் விளக்கமறியலில்!
பனை ஓலையிலான அரச்சனைத் தட்டுகள் நல்லூரில் விற்பனையில்!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது!
|
|
|


