தொலைபேசி கட்டணத்தில் வற் வரி சேராது!

Monday, July 18th, 2016

தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார்.

வற் வரி அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.இந்த தீர்ப்பிற்கு அமைய தொலைபேசி கட்டணங்களில் வற் வரியை சேர்க்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி வற் வரி அதிகரிப்பின் அடிப்படையில் தொலைபேசி கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது என நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பெறுமதி சேர் வரி எனப்படும் வற் வரியை அரசாங்கம் உயர்த்தியதன் பின்னர், தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசிக் கட்டணங்களை உயர்த்தியிருந்தன. இதன்படி தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 49.5 வீதத்தினால் உயர்த்தப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு அமைய பாவனையாளர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் அதிகரிக்கப்பட்ட வற் வரி கட்டணத்தில் சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் சுனில் எஸ் சிறிசேன தெரிவித்துள்ளார்

Related posts: