பார்த்தீனிய பரவலால் வலிகாமத்தில் விவசாயிகள் பாதிப்பு!

Tuesday, February 21st, 2017

யாழ்.வலிகாமம் பகுதியில் விவசாய நிலங்களில் பார்த்தினீயத்தின் பரம்பல் அதிகரித்துக் காணப்படுவதால் தாம் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வலிகாமம் பகுதியில் ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குப்பிளான், மயிலங்காடு, வசாவிளான், குரும்பசிட்டி, ஈவினை, சுன்னாகம்,மருதனார் மடம், அச்செழு, ஊரெழு, உரும்பிராய் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் பார்த்தீனியச் செடிகள் அதிகம் முளைப்பதால் தமது விவசாயச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பயிர்களுக்குச் சேர வேண்டிய சத்துக்களைப் பார்த்தீனியச் செடிகள் தமக்குள் உள்ளுறிஞ்சிக் கொள்வதாகக் கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், பார்த்தீனியச் செடிகளை அடியோடு பிடுங்கி அழிக்கும் செயற்பாட்டை அடிக்கடி மேற்கொண்டு வந்த போதும் பார்த்தீனியச் செடிகள் மீண்டும் மீண்டும் வளர்வதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

110-600x449

Related posts: