தொடர்ச்சியான இரத்து மற்றும் தாமதங்கள் – பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ரத்து மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இரண்டு எயார்பஸ் V330 விமானங்கள் பல நாட்கள் சேவையில் ஈடுபடாமையால் குறித்த விமான சேவை நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டது.
உலகளாவிய விநியோக பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளிட்டவை சவால்களாக அமைந்தன.
இந்தநிலையில், பண்டிகைக் காலத்தில் பயணிகளின் பயணத் திட்டங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!
மூன்று மாதங்களில் 108 பில்லியன் வருமானம் - தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்...
ஊழியர்களுக்கு வழங்கிய கடனால் இரு அரச நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் - கணக்காய்வாளரின் அறிக்...
|
|