தென்மராட்சியில் மேலும் ஓர் உற்பத்திக் கிராமம்!

Wednesday, May 9th, 2018

தென்மராட்சி பிரதேசத்தில் மேலும் ஒரு உற்பத்திக் கிராமத்தை உருவாக்க தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் உற்பத்திக் கிராமம் உருவாக்கி அங்குள்ள பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அந்த பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் உப உணவுப் பயிர்களிலிருந்து பொருள்களைத் தயாரித்து அவற்றினை சந்தைப்படுத்தவுமென தலா 7 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

தென்மராட்சிப் பகுதியில் ஏற்கனவே கைதடி பிரதேசத்தில் உற்பத்திக் கிராமம் உருவாக்கப்பட்டு கைதடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக ஆலை அமைத்து அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்களிலிருந்து போசாக்கான உணவுப் பொருள்களைத் தயாரித்து சந்தைப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் ஒரு உற்பத்திக் கிராமமாக மட்டுவில் சந்திரபுரம் கிராமம் தெரிவு செய்யப்பட்டு அங்கு ஆலை நிர்மாணித்து உணவுப் பொருள்கள் தயாரித்து சந்தைப்படுத்துவதற்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டது.

உற்பத்தி ஆலைகள் அமைத்து செயற்படத் தொடங்கியதும் பலர் வேலை வாய்ப்பினைப் பெறுவதுடன் நிரந்தர வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: