தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க தொழில்நுட்பப் பயிற்சி!

Sunday, January 6th, 2019

வட மாகாணத்தில் தென்னை பயிர்ச்செய்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சியை தென்னை அபிவிருத்தி சபை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 36 பேருக்கு பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றன. ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படும் பயிற்சியின் முடிவில் இந்த தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் உதவிகள் வழங்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சியை பெற்றுக்கொண்டவர்கள் வடக்கில் உள்ள மக்களுக்கு தமது தென்னைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

பொதுவாக தென்னை பயிர்ச் செய்கைக்கான உரிய தொழில்நுட்ப ஏற்பாடுகள் இன்றி மேற்கொள்வதால் எதிர்பார்த்த நன்மைகளை பெற்றுக்கொள்வதில்லை எனவே தென்னம் கன்றுகளை உரிய தொழில்நுட்பத்துடன் நடுகை செய்து பராமரிப்பதன் ஊடாகவே அவற்றின் மூலம் விரைவாக பயனை பெற்றுக்கொள்ள முடியும்.

இதனிடையே வடக்கு மாகாணத்தில் இவ்வாண்டு காலபோகத்தின்போது மக்களுக்கு விநியோகிக்க குறைந்தது நான்கு இலட்சத்து ஐம்பது ஆயிரம் தென்னம் கன்றுகளை பெற்றுத்தருமாறு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதம் அண்மையில் தெங்கு அபிவிருத்தி சபைக்கு சபையின் வடக்கு அலுவலகம் அனுப்பி வைத்துள்ளது.கடந்தாண்டு தென்னை அபிவிருத்தி சபையினால் எமக்கு இரண்டு இலட்சத்து 35 ஆயிரம் வரையிலான தென்னம் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. இவ்வாண்டு தென்னை செய்கையை அதிகரிக்கும் முகமாக மக்களுக்கு தென்னம் கன்றுகளை வழங்கி வைப்பதற்காக கூடுதல் தென்னம் கன்றுகளுக்கும் தெங்கு அபிவிருத்தி சபையின் வடக்கு அலுவலகம் விண்ணப்பித்துள்ளது.

Related posts: