திருகோணமலையில் கடுமையான வறட்சி 400 குடும்பங்கள் பாதிப்பு!

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வறட்சி காரணமாக 440 குடும்பங்களில் உள்ள 1,381பேர் பாதிக்கப்ப்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 3 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துநகர் பகுதியில் 200 குடும்பங்களும், மங்கையோது பகுதியில் 225 குடும்பங்களும் மற்றும் வெலிகம பகுதியில் 15 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் PCR பரிசோதனை - இன்றுமுதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ...
தொழில்நுட்பக் கல்லூரிகள் வலுப்பவதனால் எமது இளம் சமூகத்தினரும் தொழிற்திறன் மிக்கவர்களாக பரிணமிக்கத் த...
யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துகர்ப்பிணி பெண் ஒரு...
|
|