டிக்கட் இன்றி ரயிலில் பயணித்தோரிடமிருந்து 03 மணி நேரத்தில் மூன்று இலட்சத்து 78,000 ரூபா வருமானம் – புகையிரத வர்த்தக பிரதி பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2022

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நேற்று காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை இடம்பெற்ற விசேட பயணச்சீட்டு பரிசோதனையின் போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை புகையிரத நிலைய ஊழியர்கள் இணைந்து இந்த விசேட பரிசோதனையை மேற்கொண்டதாக புகையிரத வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

அங்கு கைது செய்யப்பட்ட 78 பேர் அபராதத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தியுள்ளனர்.

அவர்களிடமிருந்து பெற்ற அபராதத் தொகை இரண்டு லட்சத்து 38,770 ரூபாவாகும். ஏனைய 46 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதத் தொகை ஒரு இலட்சத்து 39,840 ரூபா எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, டிக்கட் இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடம் இருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 இலட்சத்து 78,610 ரூபாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

00

Related posts: