யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை சிறப்பாக முன்னெடுப்பு – பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்களிப்பு என சுகாதார பகுதியினர் தெரிவிப்பு!

Monday, May 31st, 2021

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்  நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் நாள் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு யாழ்மாவட்டத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 63 கிராம செயலர் பிரிவுகளில் 12 தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் இன்றும் இரண்டாம் நாளாகவும் பொதுமக்களுக்கான தடுப்பூசி வழங்குதல் இடம்பெற்றது.

அத்துடன் கொரோனா  தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு   பொது மக்கள் விருப்பத்துடன் வருகை தந்து குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், தடுப்பூசி நிலையத்திற்கு வருகை தந்து தமக்குரிய தடுப்பூசியினை ஆர்வத்துடன் பெற்றுச் செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது

குறித்த தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு நேரில் சென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை பார்வையிட்டனர்.

இதேநேரம் அதிமேதகு ஜனாதிபதி, பிரதமரின்  வழிகாட்டுதலின் கீழ் கொவிட் தடுப்பு மருந்துடன் வலிமையுடன் முன்னோக்கி” என்னும் செயற்றிட்டத்தின் கீழ்சுகாதார மேம்பாட்டு பணியகத்தின்  “கொவிட் தடுப்பு மருந்துடன் வலிமையுடன் முன்னோக்கி*”என்னும்  கருப்பொருளுக்கு அமைய ஆரம்பமாகிய  Covid 19 தடுப்பூசி  மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 2 ஆயிரத்து 948 பேருக்கு  சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும். உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசியே யாழில் வழங்கப்படுகின்றது எனவும் பொதுமக்கள் தயக்கமின்றி  தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்திற்கு மாத்திரமே தடுப்பூசி முதற்கட்டமாக கிடைத்திருக்கின்றது எனவே பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  தடுப்பூசி பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும்  எனவும் சுட்டிக்காட்டியுள்ள கொரோனா செயலணி நேற்றையதினம் இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் இந்த தடுப்பூசியை பெறுவதில் தயக்கம் காட்டிய நிலை காணப்பட்டதாகவும் நேற்றைய எமது இலக்கில்  52 சதவீதமானோருக்கு மாத்திரமே   தடுப்பூசி வழங்கக் கூடியதாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் எதிர்வரும் மூன்று நான்கு நாட்களுக்குள் இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முடிவுறுத்தப்பட வேண்டியுள்ளது பொதுமக்கள் அனைவரும் குறிப்பிடப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள மத்திய நிலையங்களுக்கு  சென்று தமக்கான தடுப்பூசிகளை தயக்கமின்றி பெற்றுக்கொள்ளமுடியும்

ஏதாவது ஒவ்வாமை அல்லது ஒரு நோய் இருந்தால் அதற்குரிய அறிவுறுத்தல் அதற்குரிய நடைமுறை சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் அவ்வாறு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால்  வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்குரிய தடுப்பூசி வழங்கப்படும். அதற்குரிய அறிவுரைகளை சுகாதாரப் பிரிவினர் வழங்குவார்கள் எனவே பொதுமக்கள் தயக்கமின்றி தமக்குரிய தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம்

மேலும் நாளை 22 புதிய நிலையங்களை  பிரதேச செயலர் பிரிவுகளில் ஆரம்பிக்கவுள்ளோம் இந்த தடுப்பூசியை மிக விரைவாக செலுத்துவதற்கு புதிய நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவே பொதுமக்களுக்கு கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக தங்களுக்குரிய அறிவுறுத்தல் கிடைக்கபெறும் எனவே தமக்குரிய அறிவுறுத்தல் கிடைத்தவுடன் தமக்குரிய தடுப்பூசிகளை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறித்த செயலணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: