தலைமை பதவியிலிருந்து ஓமல்பே சோபித தேரர் விலகல்!
Saturday, September 24th, 2016
ஜாதிக ஹெல உறுமயவின் தலைமை பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் வண. ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
இன்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 13 ஆவது கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதனடிப்படையில் புதிய இணைத்தலைவர்களாக வண. ஹெட்டிகல விமலசார தேரர் மற்றும் பிரதியமைச்சர் கருணாசேன பரணவிதாரண நியமக்கப்பட்டுள்ளார். மேலும் பொதுச்செயளாளராக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
கொழும்பில் உள்ள சீஷெல்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகராலயத்தை மூட தீர்மானம்!
மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் மடு தேவாலய உற்சவம்!
நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு - குடிவரவு மற்றும் குடியகல்...
|
|
|


