தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட ஏற்பாடு!

Tuesday, March 21st, 2017

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் உடுதுணிகள் உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவில் சதொச கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களில் கொள்வனவு செய்து கொள்ள தற்போது கொள்வனவு செய்துக்கொள்ள முடியும்.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்குத் மேவையான பொருட்கள விநியோகம் தொடர்பாக சதொச நிறுவனத்தின் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவிக்கையில்

லக் சதொச மூலம் நுகர்வோருக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் விநியோகிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 50 லக்சதொச கிளைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நுகர்வோரின் வசதிக்காக இம் மாதம் இறுதி முதல் புத்தாண்டு காலம் நிறைவடையும் வரையில் சதொச கிளைகள் திறந்திருக்கும் நேரங்கள் நீடிக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டுக்காக தனியார் துறையினர் தயாராக இருப்பதாகவும் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இத்துறையுடன் தொடர்புடைய ஏற்றுமதி வர்த்தக சங்கத்தின்த லைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

Related posts:

நாட்டின் அதி முக்கிய தெரிவுக்குழுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் - நாடாளுமன்...
நாட்டுக்குள் கடல் வழியாக போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில் முப்படை...
தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும...