சாவகச்சேரி கால்நடை மருத்துவரின் அறிவிப்பு!

Saturday, February 18th, 2017

சாவகச்சேரி கால்நடை மருத்துவர் அலுவலக வெளிநோயாளர் பிரிவு ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8 மணி தொடக்கம் மு.ப 11.30மணி தொடக்கம் மாலை 4.30மணிவரை வெளிக்கள சேவைகள் இடம்பெறுவதால் வெளிநோயாளர் பிரிவில் செயற்படாது என கால்நடை மருத்துவர் சசிமாறன் அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பிரதேச கால்நடை மருத்துவர் அலுவலகத்தில் ஒரு மருத்துவரே கடமையாற்றுவதால் வெளிநோயாளர் பிரிவு மற்றும் வெளிக்கள வேலைகள் அனைத்தும் அவரே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆடு,மாடு போன்றவைக்கு அவசர சிகிச்சை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் போது அவசியம் அங்கு செல்ல வேண்டியுள்ளது. மாதத்தில் 6நாட்கள் கால்நடைகள் சினப்படுத்தல், மற்றும் தொடர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பிரதேசத்தில் 60 கிராம அலுவலர் பிரிவிலும் பணியாற்ற வேண்டியிருப்பதால் நாய்,பூனை உட்பட கால்நடைகளுக்குப் பன்படுத்தப்பட்ட பூச்சி மருந்து தெள்ளு போன்றவற்றை கட்டுப்பத்தும் மருந்துகள் பெற்றுக்கொள்ள வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் காலை 8 மணி தொடக்கம் மு.ப 11.30 மணிவரை மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும். வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தருகின்ற மக்கள் மு.ப 11.30மணிக்குள் அலுவலகத்திற்கு வருகை தந்து மருந்துகளைப் பெற்றுச்செல்லுமாறும் அவர் கேட்டுள்ளார்.

800x480_IMAGE62313441

Related posts: