நாட்டுக்குள் கடல் வழியாக போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில் முப்படையினர் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ!

Friday, September 25th, 2020

சட்டவிரோத போதைப் பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படும் அதேவேளை போதைப் பொருளை கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டு வருவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து செயற்படுவதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு இடங்களிலும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை சுற்றிவளைக்கும் அதேவேளை இவை எவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன? யார் கொண்டு வருகின்றார்கள்? எந்த எந்த இடங்களில் இருந்து கொண்டுவரப்படுகின்றன? அவற்றை கண்டறிவதற்கான நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டை சூழவும் கடல் பிரதேசங்களில் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தி முப்படையினரும் பொலிசாரும் இணைந்து நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுத்தால் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நல்லாட்சி அரசாங்கம் என்னை திட்டமிட்டுச் சிறைப்படுத்தியது - மக்களுக்கு சேவையாற்ற சந்தர்ப்பத்தை பெற்ற...
கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி அடுத்த ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் பந்துல குணவர்தன...
உயர்தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னரே உள்ளூராட்சி தேர்தலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் - தேர்தல் ...

அரச மற்றும் தனியார் துறையினரின் வினைத்திறனற்ற சேவையாற்றலே நாட்டின் பிரச்சினை – ஜனாதிபதி சுட்டிக்காட்...
கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கும் முறைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு - சுகாதார அ...
நாட்டில் மேலும் சில ஒமிக்ரொன் தொற்றாளர்கள் இருக்கலாம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை...