தப்பியோடிய இராணுவத்தினரே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் – இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை!

Wednesday, June 20th, 2018

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு அடைக்கலமளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மற்றும் தொடர்ந்தும் விடுப்பில் இருப்பவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை நாடளாவிய ரீதியில் இடம்பெறுவதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று அவர்களுக்கு உதவுவது மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் இராணுவத் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் ஒரு பிரிவினரும் விடுமுறையில் சென்ற பின்னர் தலைமறைவாகியுள்ள சிலரும் கொள்ளைகள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற தகவல் பொலிஸார் மூலம் கிடைத்துள்ளது எனவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் சிலர் அரசியல் ரீதியாகச் செல்வாக்குப் படைத்தவர்கள் மற்றும் மதகுருமார்களிடம் அடைக்கலம் பெறமுனைந்துள்ளனர் எனவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts: