அத்தியாவசிய பொருட்களை கூடிய விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை!

Wednesday, February 1st, 2017

வவுனியா வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வகையில் கட்டுப்பாட்டு விலையில் விற்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்களும் அவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தவகையில் மைசூர் பருப்பு ஒரு கிலோகிராம் 159ரூபா இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி கருவாடு(தாய்லாந்து) ஒரு கிலோகிராம் 490ரூபா இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி கருவாடு(டுபாய்) கிலோகிராம் 405ரூபா பாசிப்பயறு ஒரு கிலோகிராம் 205ரூபா வெள்ளைச் சீனி கிலோகிராம் 93ரூபா உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது 115ரூபா போன்ற பொருட்கள் பாவனையாளர் அலுவலக அதிகார சபையினால் வெளியிடப்பட்ட விலைகளுக்கு அமைவான விலையில் விற்பனை செய்யவேண்டும்.

4684-products-in-concessionary-price1192965891

Related posts: