தனியார் வைத்தியசாலைகளில் அநாவசியமாக பணம் அறவிடப்படுவது தொடர்பில் முறைப்பாடு!

தனியார் வைத்தியசாலைகளை சிகிச்சைக்காக வருகின்ற நோயாளர்களிடம் அநாவசியமாக பணம் அறவிடப்படுவது தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இரசாயான ஆய்வுகூட சேவைகளுக்காக அதிகளவு கட்டணங்கள் விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம குறிப்பிட்டார். ஆயினும் அத்தகைய கட்டணங்களை மேலும் குறைப்பதற்கான இயலுமை காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.அதிக கட்டணங்கள் அறவிடப்பட்ட போதிலும், சில தனியார் வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் வைத்திய அறிக்கைகளின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்
Related posts:
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது!
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை - சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானம் ...
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்!
|
|