தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு!

Friday, September 10th, 2021

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீரமானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று 10 திகதி முற்பகல் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணி கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 13 ஆம்திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே ஆபத்து இல்லாமல் விரைவில் மீண்டும் நாட்டை திறக்க முடியும் என நம்புவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்பதாக நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்ததையடுத்து கடந்த மாதம் 20 ஆம் திகதிமுதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தொடர்ச்சியாக ஊரடங்கு நீடிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் அமுல்படுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கொவிட் 19 செயலணி கூட்டத்தில் குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டசத்தை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நீடிப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: