தந்தைக்கு அச்சப்பட்டு மரத்தில் ஏறி ஒழிந்திருந்த சிறுவன் தவறி விழுந்து காயம் 

Friday, April 14th, 2017

தந்தை தேடி வருவார் என அச்சப்பட்டு மரத்தில் ஏறி ஒழிந்திருந்த மகனொருவர் தவறி விழுந்து காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நேற்றுமுன்தினம் புதன்கிழமை(12) மதியம் யாழ். சுதுமலை மானிப்பாய்ப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் லேனாட் நிரோஜன் நிதுஷன்(வயது-13) என்ற சிறுவனே படுகாயங்களுக்குள்ளானவராவார்.

கடந்த தவணைப் பரீட்சையில் குறித்த சிறுவன் பாடங்களில் குறைவான புள்ளிகள் பெற்றுள்ளான். இந்தநிலையில் நேற்று விசுவமடுவிலிருந்து சுதுமலைக்குக் குறித்த சிறுவனின் தந்தையார் பிள்ளைகளைப் பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் தனது தந்தை தன்னை ஏசுவார் என எண்ணிக் கொண்ட சிறுவன் மரத்தில் ஏறி ஒழிந்து கொண்டுள்ளான். நீண்ட நேரமாக மரத்திலிருந்த சிறுவன் வெயில் கொடுமையினால் மயங்கிக் கீழே விழுந்துள்ளான். இதனையடுத்து உடனடியாகக் குறித்த சிறுவன் உறவினர்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீள் சுழற்சிக்கான கழிவகற்றல் நடவடிக்கை மீண்டும் ஆரம்ப...
அனைத்து அரச மற்றும் தனியார் துறைகளையும் உள்ளடக்கி நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும...
உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படாது - அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர...