டெங்குக் கட்டுப்பாடு நடவடிக்கையில் 42பேருக்கு எதிராக வழக்கு!

Monday, January 30th, 2017

டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் தொடர்பான சோதனை நடவடிக்கைகளில் 42 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படும் என்று சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இணுவில் மற்றும் சுன்னாகப் பகுதிகளில் டெங்கின் தாக்கம் அதிகமாக உள்ளதாக அறியப்பட்டதையடுத்து நேற்றையதினம் இணுவில் பொதுச் சுகாதார பிரிவினருடன் யாழ்.மாவட்ட பொதுச் சுகாதார சங்கம் இணைந்து 40பேர்கொண்ட குழுவினரால் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இந்த நடவடிக்கை காலை 7 மணி முதல் நண்பகல் 12மணிவரை இடம்பெற்றது. சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் வலி.தெற்கு பிரதேச சபையின் முழு ஒத்துழைப்புடுன் கழிவுகளும் அகற்றப்பட்டன.

இந்தச் சோதனை நடவடிக்கையில் இணுவில் பகுதியி; 336 வீடுகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 283 இடங்களில் நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டன. அத்துடன் 42இடங்களில் நுளம்புக் குடம்பிகள் காணப்பட்டன. குறித்த 42 இடங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தர்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளன என சுகதாரப் பரிசோதகைர் தெரிவித்துள்ளனர்.

GTY_supreme_court_cases_jef_131003_33x16_1600

Related posts: