ஜுலை 5 ஆம் திகதி நியமனக்கடிதம்!
Saturday, July 1st, 2017
சப்ரகமுவ மாகாணசபையில் புதிய ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதம் எதிர்வரும் 5ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் மகிந்த எஸ் .வீரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிதாக 400 ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரம் www.moe.sg.gov.lk என்ற இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தபால் வேலை நிறுத்தத்தினால் அழைப்புக் கடிதம் கிடைக்காதோர் எதிர்வரும் 5ம் திகதி இரத்தினபுரி மத்திய நூலகத்திற்கு வருகை தருமாறு அவர் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளை கேட்டுள்ளார்.
Related posts:
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்கான சோதனை தொடரும்..!
யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு – ஏனையோருக்கும...
க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சார்த்திகள் இருவேறு கோரிக்கை முன்வைப்பு - நியாயமான தீர்மானமொன...
|
|
|


