மோசடிகள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு!

Monday, May 30th, 2016

பாரியளவிலான ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அரசு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரியளவிலான மோசடிகள் ஊழல் தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளை எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் பூர்த்தியாக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பல சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு ஜனாதிபதியும் பிரதமரும் அண்மையில் உத்தரவிட்டுள்ளனர்.

இதன்படி பாரியளவில் அரச சொத்துக்களை கொள்ளையிடுதல் பொதுமக்கள் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தல் மற்றும் பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஊழல் மோசடிகள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடையவர்கள் தொடர்பிலும் விரிவான அறிக்கை ஒன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Related posts: