சோளம் இறக்குமதி செய்ய அனுமதி!

விலங்குகளின் உணவிற்காக மட்டும் சோள இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலைமையின் கீழ் நேற்று இது தொடர்பான நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலை அடுத்தே சோள இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய சோளம் கிலோ ஒன்றின் விலை ரூபாய் 52.50 என்றும், இதனை சதோச மூலம் 45 ரூபாவிற்கு கொள்வனவு செய்யமுடியும் எனவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த மாதங்களில் கோழி இறைச்சிக்காக அரசு கட்டுப்பாட்டு விலையை அறிவித்திருந்த போதும் குறித்த விலைக்கு கோழி இறைச்சியை விற்க முடியாதென வியாபாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் கைது!
யாழ். குடாநாட்டில் 38 பேருக்கு கொரோனா தொற்று - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!
கல்விக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கான பேச்சுவார்த்தை - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
|
|