சுவரொட்டிகளை காட்சிப்படுத்தல் முற்றாகத் தடைசெய்யப்படுகின்றது யாழ்.மாநகரசபை ஆணையாளர் அறிவிப்பு!
Monday, January 2nd, 2017
யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படும் குறித்தொதுக்கப்பட்ட இடங்கள் தவிர்ந்த பொதுச்சொத்துக்கள், பொது இடங்களில் சுவரொட்டிகளை வெளிப்படுத்தல் (ஒட்டுதல்) மற்றும் வீதிகளின் ஓரங்களில் பொது இடங்களில் உள்ள நிழல் தரும் மரங்களில் விளம்பரத் தகடுகளை மற்றும் பலகைகைள ஆணிகளைப் பாவித்துப் பொருத்துதல் முற்றாகத் தடைச் செய்யப்படுகினறு.
குறித்த முடிவு பொதுச் சொத்துக்களை பாதுகாப்பும் முகமாகவும், வரியிறுப்பாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கவும் யாழ்.மாநகர சபை பகுதியை அழுகுபடுத்தவும் எடுக்கப்படுகிறது. சுவராட்டிகளை விளம்பர நோக்கத்திற்காகவும், அறிவுறுத்தல் நோக்கத்திற்காக காட்சிப்படுத்த விரும்புவோர் தங்களது 2ற்கும் மேற்படாத சுவரொட்டிகளை யாழ்.மாநகர சபையும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து நகரப் பகுதியில் ஆங்காங்கே நிறுவியிருக்கின்ற விளம்பரப் பலகைகளில் மாத்திரம் காட்சிப்படுத்த முடியும். சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்துவோர் தங்களது சொந்த ஆதனங்களில் காட்சிப்படுத்த தடை எதுவும் இல்லை எனினும் மற்றையவர்களது ஆதனங்களின் மீது காட்சிப்படுத்துவது தவிர்க்கப்படல் வேண்டும்.
விளம்பரம் மற்றும் அறிழவுறுத்தல்களை பதாகை அல்லது தொங்கும்பதாகை வடிவில் காட்சிப்படுத்த விரும்புவோர் யாழ்.மாநகர சபையின் அனுமதியுடன் காட்சிப்படுத்த முடியும். விளம்பரம் மற்றும் அறிவுறுத்தல்களின் தன்மையைப் பொறுத்துக்கட்டணம் அறவிடுதல் தொடர்பாகத் தீர்மானிக்கப்படும். மேற்படி அறிவுறுத்தல்களை மீறி சுவரொட்டிகளை மற்றும் விளம்பரத் தகடுகளை வீதி குறியீட்டு பலகைகள், பொது இடங்கள், பொதுச் சொத்துக்கள் மீது காட்டிப்படுத்த முற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான மீறல் புரியம் விளம்பரதாரர்கள் இவ்விடயத்தில் பொறுப்பாளிகள் ஆக்கப்படுவர் என யாழ்.மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


