பிரமிட் வியாபாரத்தில் ஈடுபடுவோர் நீதிமன்றின் முன் நிறுத்தப்படுவர்-யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு எச்சரிக்கை!

Friday, February 10th, 2017

பரவலாக இடம்பெற்றுவரும் பிரமிட் வியாபாரத்தை தடை செய்வதற்கு யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு நடவடிக்கை களை மேற்கொண்டுவருகின்றது.

இது குறித்து யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தெரிவிக்கையில்

பிரமிட் வியாபாரத்தின் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் நோக்கோடு இலங்கை மத்திய வங்கியினால் துண்டுப்பிர சுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  இதனைத்தொடர்ந்து குறித்த வியாபாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ் பொலிஸ் நிலைய  குற்றத்தடுப்பு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

குறித்த வியாபாரமானது ஒரு பிரமிட்  வடிவாக இருப்பதுடன் ஒரு தனி நபரிற்கு கீழ் மேலதிக நபர்களை இணைத்துவிடுவதன் முலம் இலாபம் உழைக்கும் முறையாகும். இதில் மருந்து இதங்க நாணயங்கள், மரத்தளபாடங்கள், மினசாரப்பொருட்கள், போன்றனவ ற்றை வாங்க வேண்டும்

ஒரு தொகைப்பணத்தை செலுத்த வேண்டும் அல்லது இணையத்தளம் முலமாக வைப்பிலிட வேண்டும்.இத் திட்டத்தில் இணைவ தற்கு மற்றவர்களை சேர்த்தல் வேண்டும் என மக்களுக்கு பணிப்பிக்கப்படுகின்றது. இவை வங்கித்தொழில் சட்டத்தின் 83சி பிரி வின் கீழ் சட்டவிரோதமாகும்.இதில் மக்கள் வஞ்சகமான முறையில் கவரப்படுகின்றனர். நம்ப முடியாத வருமானங்கள் வளமா ன தும் சந்தோசமானதுமான வாழ்க்கை  இலகுவில் புதிய ஆட்களை சேர்த்துக்கொள்ளமுடியும் போன்ற உறுதிமொழிகளால் கவரப்படு கின்றனர்.

ஊக்குவிப்பாளர்கள் மிகவும் உறுதியளிக்கும் விளக்கங்களை அளிப்பதன் முலம் பங்கேற்பாளர்களை சேர்க்கும் கூட்டங்கள் திறமையாகவும் நம்பிக்கையூட்டும் விதத்தில் நடத்துகின்றனர்.இதனால் இலகுவாக பணம் சம்பாதிக்கும் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் திண்டாடுகின்றனர். பெருமளவு எதிர் கால வருமானத்தை குறுகிய காலத்தில் அடைய முடியும் என ஊக்குவிப்பாளர்கள் பங்கேற்பாளர்களுக்கு உத்தர வாதம் அளிக்கின்றனர்.இதனால் அவர்கள் நிறுவனத்தில் விற்பனையாகும் பொருட்களை பெருமளவு பணம் கொடுத்து வாங்கு வதுடன்  இத்திட்டத்தில் மற்றவர்களை சேர்த்துவிடுவதன் மூலம் வருகின்ற வருமானத்தின் ஒரு பங்கு பாவனையாளருக்கு வழங்க ப்படும் என அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது.

இதன்மூலம் பெறப்படும் வருமானங்கள் குறித்த திட்டத்தின் விரிவாக்கத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இத்திட்டம் குறுகிய ஒரு காலப்பகுதிக்குள் முறிவடையும். இதனால்  அநேகமாக புதிய பங்கேற்பாளர்கள் எதிர்பார்த்த வருமானத்தை இழப்பதோடு கூடுதலாக விலை மதிப்பீடு செய்யப்பட்ட பொருட்களையும் வைத்திருக்க வேண்டியிருக்கும்  எனினும் 1988 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க அந்நிய செலாவாணி கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க பணம் தூயதாக்கல் தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் சில கொடுப்பனவுகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தண்டிக்கப்படகூடிய குற்றங்கள் ஆகும்.

குறிப்பிட்ட செயல்கள் மூலம் ஏதாவது ஒரு நபர் இப்படிப்பட்ட தடை செய்யப்பட்ட திட்டத்தில் பங்குபற்றிய குற்றவாளியாக கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு 3 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாய்க்கு குறையாத அபராதம் என்பன நீதிமன்றத்தால் விதிக்கப்படும்

மேலும் மற்றைய ஒரு நபருக்கு இழப்பு அல்லது தீமையை உண்டுபண்ணும் விதத்தில் குற்றங்களானது வேண்டுமென்றோ  அல்லது தெரிந்து கொண்டோ புரிந்திருந்தால் 3 வருடங்களுக்கு குறையாத மற்றும் 5 வருடங்களுக்கு மேற்படாத கடூழியச் சிறைத்தண்டனை மற்றும் 20 மில்லியன் ரூபாய் அபராதம் அல்லது திட்டத்தின் பங்குபற்றுபவர்களிடம் இருந்து பெறப்பட்ட இலங்கை நாணயத்தின் முழுத் தொகையின் இருமடங்கு என்பவற்றில் எது கூடியதோ அத்தொகையை கொண்ட அபராதம் நீதிமன்றங்களால் விதிக்க ப்படும்.

எனவே இத்திட்டத்தில் எவரும் இணையவேண்டாம் அப்படி இணைந்துகொள்பவர்கள் வருகின்ற நாட்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என மேலும் தெரிவித்தார்.

timthumb

Related posts: