சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச தேயிலைப் பொதி

Monday, April 17th, 2017

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேயிலைப் பொதிகளை அன்பளிப்பாக வழங்கும் திட்டம் ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேயிலைப் பொதியொன்றை வழங்கும் திட்டம் தொடர்பாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசநாயக்க அமைச்சரவைக்குப் பரிந்துரை ஒன்றை செய்திருந்தார்.இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சுடன் பெருந்தோட்டத்துறை அமைச்சு ஆலோசனை நடத்துமாறு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

அதேவேளை, சுற்றுலாப் பயணிகள் நாடு திரும்பும் போது, தேயிலைப் பொதிகளை வழங்கலாம் என்று சில அமைச்சர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இல்லாவிட்டால், தேயிலைப் பொதிகளை சுற்றுலாப் பயணிகள் தமது பயணம் முழுவதும் காவிக் கொண்டு செல்ல வேண்டியேற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தேயிலையை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Related posts: