“சுபபெத்தும்” தேசிய புலமைப்பரிசில் நிதியை பெற விண்ணப்பம் கோரல்!

Tuesday, May 8th, 2018

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் நடைமுறைப்படுத்தி வரும் சுபபெத்தும் தேசிய புலமைப்பரிசில் நிதியை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாணவர்களிடமிருந்து கோரியுள்ளது.

2016, 2017 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை க.பொ.த சாதாரணதரப் பரீட்சை உயர்தரப் பரீட்சை என்பவற்றில் மாவட்ட தேசிய மாகாண மட்டத்தில் உயர்ந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் இப் புலமைப்பரிசில் நிதிக்காக விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

ஒவ்வொரு வருடத்திற்கும் 300 புலமைப் பரிசில்கள் வீதம் இரு வருடங்களுக்கும் 600 புலமைப்பரிசில்கள் சகல மாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும். இதற்கென தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 36 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு முறையாக சுபபெத்தும் தேசிய புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகளில் சித்தி பெற்றோரில் மாவட்ட மட்டத்தில் முதல் நான்கு இடங்களைப் பெற்றோர் முதற் கட்டமாக தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் கலை, விஞ்ஞானம், கணிதம், வர்த்தக துறை மாணவர்களுக்கு 50,000 ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன் தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபன தலைமைக் காரியாலத்திற்கு அல்லது பிராந்திய காரியாலயங்களுக்கு அனுப்ப முடியும்.

Related posts: