வன்னியின் ஆறு இடங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் – அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2016

வன்னி மாவட்டத்தில் நீரால் ஏற்படும் நோய்த்தாக்கம் அதிகமாகக் காணப்படும் மேலும் 6 இடங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனராத்ன தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்துக்கு நீரிழிவு நோய் தடுப்புச் செயலகம் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது:

வன்னி மாவட்டத்தில் நீர் தொடர்பான நோய்த்தாக்கம் அதிகம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அதிக தாக்கம் உள்ள பிரதேசங்களாக மேலும் 6 பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள்ளன. அந்தப் பிரதேசங்களில் அடுத்த ஆண்டு நீர் வடிகட்டும் நிலையங்கள் அமைக்கப்படும். திறந்து வைக்கப்பட்டுள்ள அலுவலகம் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்துக்கான செயலகமாகவோ இயங்கும் – என்றார்.

R-Sena

Related posts: