சுகாதாரச் சீர்கேட்டு: உணவக  உரிமையாளருக்கு 5,000 அபராதம்!

Saturday, December 2nd, 2017

நாவற்குளியில் சுகாதாரத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் உணவகம் நடத்தியவருக்கு சாவகச்சேரி நீதிமன்று 5 ஆயிரம் ரூபா தஅபராதம் விதித்துள்ளது..

கைதடி நகரப்பகுதியில் உள்ள உணவகம் நீதிமன்றால் சீல் வைக்கப்பட்டதையடுத்து சாவகச்சேரி சுகாதாரப்பகுதியினர் கைதடி மற்றும் நாவற்குளி ஆகிய இடங்களிலுள்ள உணவகங்கள் சிற்றுண்டி நிலையங்கள் பலசரக்கு விற்பனை நிலையங்கள் போன்றவற்றை நடத்துபவர்களுக்கு கருத்தரங்குகளை நடத்தி உணவு கையாளும் நிலையங்களின் சுகாதாரம் தொடர்பான விளக்கங்களும் வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் அண்மையில் நாவற்குளியில் உள்ள உணவகத்தில் பரிசோதனை மேற்கொண்ட வேளையில் அவிக்காத இறைச்சிக்குப் பக்கத்தில் ரொட்டி வைத்திருந்தமை, சமையலறைக்குள் நாய்கள் நடமாடியமை, கழிவு நீரை திறந்த நிலையில் வெளியேற்றியமை, தனிநபர் சுகாதாரம் பேணாத (நகம் வெட்டப்படாத) சிப்பந்திகளை பணியில் அமர்த்தியிருந்தமை, நிலையத்தில் இலையான் பெருக்கம் காணப்பட்டமை போன்றவை காணப்பட்டதால் நிலைய உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சுமத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுக்களையும் உரிமையாளர் ஏற்றுக்கொண்டதால் வழக்கை விசாரித்த நீதிமன்ற பதில் நீதிவான் ப.குகனேஸ்வரன் 5 குற்றங்களுக்கும் தலா ஆயிரம் ரூபா வீதம் 5 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார்.

Related posts: