சுகாதாரக் குறைவான உணவு விற்பனை வர்த்தகருக்கு 9 ஆயிரம் தண்டம்!
Thursday, July 26th, 2018
சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருள்களை விற்பனை செய்த வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் 9 ஆயிரம் ரூபா தண்டம் விதித்துள்ளது.
உசன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் எலி எச்சங்களுடன் உணவுப்பொருள்கள் வைத்திருந்தமை, எலிகளால் கடியுண்ட அரிசிமாப் பொதிகளை விற்பனைக்கு வைத்திருந்தமை, மற்றும் விற்பனைத் திகதி காலாவதியான தேயிலை மற்றும் ஜெலி வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளுடன் வர்த்தகருக்கு எதிராக எழுதுமட்டுவாழ் பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஒவ்வொரு குற்றத்துக்கும் தலா 3 ஆயிரம் வீதம் 9 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
Related posts:
வேலைத்தளங்களில் பால்நிலை சமத்துவத்தைப் பேண யாழ்.மாவட்ட செயலகத்தால் தொடர் கண்காணிப்பு!
உலக சாதனை படைத்த முதலாவது வீரரான ரொஜர் பெனிஸ்டர் காலமானார்!
இலங்கையின் மிகப்பெரிய கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெறும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூர...
|
|
|


