வேலைத்தளங்களில் பால்நிலை சமத்துவத்தைப் பேண யாழ்.மாவட்ட செயலகத்தால் தொடர் கண்காணிப்பு!

Friday, November 18th, 2016

வேலைத்தளங்களில் பால்நிலை சமத்துவத்தினைப் பேணுவது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தினால் தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலைத்தளங்களில் பால்நிலை சமத்துவத்தினைப் பேணல் தொடர்பான கலந்தரையாடல் ஒன்று யாழ்.மாவட்ட அரச அதிபரின் தலைமையில் கடந்த 10ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பால்நிலை சமத்துவம் பேணல் தொடர்பில் பல்வேறு தளங்களில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வேலைத்தளங்களில் பாலியல் இம்சை ஏற்படுத்தும் போது பாதுகாப்பின்மை, நம்பகத்தன்மையற்றதன்மை, தொழிலினை இழக்க வேண்டிய நிலை ஏற்படுத்தப்படலாம் என்ற காரணங்களினால் இவை வெளிப்படுத்தப்படுவதில்லை. எனவே ஒருவர் தனது அதிகார நிலையினைப் பயன்படுத்திப் பேரம் பேசுவது பாலியல் இச்சைக்கு உட்படுத்துவது போன்றவை வெளிக் கொணரப்படவேண்டும் என்ற அடிப்படையில் பல விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.

அந்த வகையில் உப குழுக்கள் உருவாக்கி அவர்களின் உதவியுடன் வேலைத்தளங்களில் நடத்தைக் கோவையினை நடைமுறைப்படுத்தல், இந்நடத்தைக் கோவையின் பிரயோகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், பிரச்சினைகளிற்கு முகம் கொடுப்பவர்கள் நம்பகமான முறையில் முறைப்பாடு செய்வதற்கு தொழில்நுட்ப பொறிமுறையினை ஏற்படுத்தல், இணங்காணப்பட்ட நம்பவங்களிற்கு சட்ட உதவிகள் ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற செயற் திட்டங்கள் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் வேலைத்தளங்களின் பாலியல் இம்சை மேற்கொள்ளப்படுதல் தண்டனைக்குரிய குற்றம் என்பதுடன் இத்தகைய சம்பவங்கள் சட்டரீதியாக கையாளப்படும் என்பது தொடர்பில் சகல பணியாளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் சட்டத்தரணிகள், மாவட்ட செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்த்ர்கள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்தியர், யாழ்.பொலிஸ் நிலைய பெண்கள், சிறுவர் பிரிவினை சார்ந்த பொறுப்பதிகாரி, தொழில் திணைக்கள பணிப்பாளர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 123

 

Related posts:

மக்களின் செயற்பாடுகளே கிராமங்களை முடக்குவதற்கு காரணமாக அமைகின்றது – யாழ்ப்பாணத்தில் சுகாதார சேவைகள் ...
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு!
இலங்கை அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசாங்கத்திடமிருந்தோ எந்த நிதி உதவியையும் பெறவில்லை - உகன்டா நிறுவனம்...