கிறீஸ் பிணை முறிப்பத்திர கொள்வனவு குறித்து விசாரணை!

Saturday, August 27th, 2016

இலங்கை மத்திய வங்கி, கிறீஸ் நாட்டின் பிணை முறிப்பத்திரங்களை கொள்வனவு செய்ததில் நடந்த முறைக்கேடுகள் தொடர்பாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து கிடைத்த எழுத்துமூல முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் நேரடி தலையீட்டில் கிறீஸ் நாட்டின் மத்திய வங்கியின் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட்டு, பிணை முறிப்பத்திரங்களை கொள்வனவு செய்துள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இந்த பிணை முறிப்பத்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. கிறீஸ் நாடு கடும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: