சில விமான சேவைகளை இடைநிறுத்த இலங்கை முடிவு!
Tuesday, June 28th, 2016
பாரிஸ் மற்றும் பிராங்பேர்ட் (Frankfurt) ஆகியவற்றுக்கான தனது சேவையை, இவ் வருடத்தின் குளிர்காலத்துடன் (winter) இடைநிறுத்த ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பிராங்பேர்ட் மற்றும் கொழும்புக்கு இடையிலான இறுதி விமான சேவை (UL 553/554) ஒக்டோபர் 30ம் திகதியும், பாரிஸில் இருந்து கொழும்புக்கான இறுதி விமான சேவை (UL 563/564) நவம்பர் 6ம் திகதியும் இடம்பெறவுள்ளது.
நாளாந்தம் ஏற்படும் நிதி இழப்புக் காரணமாக குறித்த விமான சேவைக்கு நிதி வழங்குவதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, ஶ்ரீலங்கள் எயார் லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Related posts:
காட்டு யானைகளின் பாதுகாப்புக்காக புகையிரதங்களுக்கு வேகக்கட்டுப்பாடு!
அரச நிறுவனங்கள் குறித்த கோப் குழு அறிக்கை எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றில்!
பிரதமர் தினேஷ் குணவர்தன - பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு - இருநாடுகளினதும் ஜனநாயக நாடாளுமன்ற செயற்பா...
|
|
|


