முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, November 21st, 2020

முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை தயாரிக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளதுடன் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆரம்ப கல்வி துறை சிரேஸ்ட நிபுணர்களின் விசேட ஆலோசனைக்கு அமைய தயரிக்கப்பட்டுள்ள முதல் நகலை பரிசீலனை செய்ததாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் முன்பள்ளி கல்வியில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலான இறுதி தீர்மானித்தை எடுப்பதற்காக பேராசிரியர் மெதகொட அபய திஸ்ஸ தேரரரின் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுதப்பட்ட பிரதேச பாடசாலைகளை தவிர ஏனைய பகுதி பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு எடுத்துள்ள தீர்மானத்திற்கு தொடர்ந்தும் எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன.

அந்த வகையில் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க கல்வியமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானமானது மீளாராயப்பட வேண்டும் என பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கான பெற்றோர் பழைய மாணவர் ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.ஐ.கே.ரத்னாயக்க கோரியுள்ளார்.

கொவிட்-19 பரவல் அதிகரித்து வரும் நிலையில் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை ஆசிரியர் சங்கமும் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

செப்பனிடப்படும் வீதிகளின் அபிவிருத்தி தொடர்பில் ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் கண்ணன்...
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் – எச்சரிக்கம் வானிலை அவதான நில...
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்ப...