சிறப்பாக சேவையாற்றிய பொலிஸார் கிளிநொச்சியில் கௌரவிக்கப்பட்டனர்!
 Friday, November 11th, 2016
        
                    Friday, November 11th, 2016
            
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டும் நிகழ்வொன்று நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் காலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன தலைமையில் குறித்த நிகழ்வு கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த காலங்களில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மது உற்பத்திகள், போதைப் பொருள் கடத்தல்கள், மரக்கடத்தல், சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியமை உள்ளிட்ட பல குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸாரை கௌரவிக்கும் முகமான குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் பாலித ஆர்.சிறிவர்த்தன சிரேஸ்ட அத்தியகட்சர், உதவி பொலிஸ் அத்தியகட்சர் ரொசான் ராஜபக்ஷ கரைச்சி பிரதே செயலாளர் கோ.நாகேஸ்வரன் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பலரும் பங்கு கொண்டனர். அண்மைக் காலங்கலான கிளிநொச்சி மாவட்டத்தில் மெற்கொள்ளப்படும் நட்ட நடவடிக்கைகளினால் குற்றச் செயல்கள் கடந்த காலங்களை விட கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        