சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 07 பேர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு!

Thursday, June 30th, 2016

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் எழுவருக்கு பொலிஸ் ஆணைக்குழுவினால் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நியமனங்ள் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன உள்ளிட்ட 07 பேரே இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, அஜித் ரோஹன, வசந்த விக்ரமசிங்க, பத்மலால் சந்துன்கஹவத்த, சம்பிக சிறிவர்தன, பிரியன்த ஜயகொடி, நிமல் பெரேரா, மர்வின் விக்ரமசிங்க ஆகியோரே பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: