மியன்மார் மீனவர்கள் திருகோணமலை மீனவர்களால் மீட்பு!
Thursday, February 9th, 2017
திருகோணமலையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு போன திருகோணமலை மீனவர்களால் இரண்டு மியன்மார் நாட்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 25ம் திகதி ஆழ்கடலில் மியன்மார் நாட்டு மீனவர்களின் பாய்மரத்தோனி காற்றினால் இழத்து வரப்பட்ட நிலையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு மீனவர்களில் ஒருவரை திருகோணமலை கொட்பே துறைமுகத்திற்கு அழைத்து வந்து திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மற்றொருவரை அழைத்துவரும் வழியில் மீனவர்கள் உள்ளனர். மேலும் காப்பாற்றப்பட்டு அழைத்து வரப்பட்ட மீனவர் தமது பெயர் மாஒசேன் என்றும் தனக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Related posts:
மத்திய வங்கி ஆளுநராக மீண்டும் பதவியேற்கவுள்ளதை உறுதி செய்த அஜித் நிவாட் கப்ரால்!
வடக்கில் போதைப்பொருள் உள்ளிட்ட இதர குற்றச் செயல்கள் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் - ப...
ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் இரத்து - எழுந்தது புதிய சர்ச்சை!
|
|
|


