சிக்கா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 115 பேரில் 57 பேர் வெளிநாட்டவர்?

சிக்கா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட 115 பேரில், 57 பேர் வெளிநாட்டினர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிக்கா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் இந்தியர்கள்; 23 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்; 10 பேர் பங்களாதேஷ் நாட்டவர்; அறுவர் மலேசியர்கள்; ஒருவர் இந்தோனேசியர்; ஒருவர் தைவானியர்; ஒருவர் மியன்மாரைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நோயாளிகள் அனைவருக்கும் மிதமான உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது. அவர்களில் பெரும்பாலோர் குணமடைந்து விட்டனர். மற்றவர்களும் நன்கு குணமடைந்து வருகின்றனர். சீனா, பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் நோயாளிகள் குறித்த தகவலைச் சிங்கப்பூர் அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவித்ததாகக் கூறின
Related posts:
கின்னஸ் சாதனை படைக்கவுள்ள மரதன் ஓட்டத்தின் இலங்கைக்கான ஓட்டம் யாழ்ப்பாணத்தில்!
பட்டப்பகலில் வீட்டில் இருந்த 16 பவுண் நகை கொள்ளை!
நாடு முழுவதும் 1250 கொத்தணிப் பாடசாலைகளை நிறுவ நடவடிக்கை - அருகில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஒரு க...
|
|