சிகரட் விலை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் விற்பனை செய்யப்பம் சிகரட்டுக்களின் விலை 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் 15 சதவீதம் வற் வரி சேர்க்கப்பட்டுள்ளதால் சிகரட் ஒன்றிற்கான விலை ஐந்து ரூபா அதிகரிக்கப்பட்டது.35 ரூபாவாக உள்ள சிகரட் 40 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.
ஆனால் சிகரட்டின் விலை மேலும் 11 ரூபாவாக அதிகரிக்க கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் காலங்களில் 46 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.அத்துடன் புகையிலை தீர்வையை அதிகரிக்க அடுத்த வாரம் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
சர்வோதயத்தால் வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!
நாட்டின் அரசியல் பொறிமுறையில் முழுமையான மாற்றம் அவசியம் - சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தல்...
கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் - ஆய்வுகள் மூலம் வெளியானது அதிர்ச்சி தகவல்!
|
|