சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிஸ் காவலரண் அமைக்குமாறு நீதிவான் ஆலோசனை!

Saturday, November 5th, 2016

சாவகச்சேரி வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் சகநோயாளிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் காவலரன் ஒள்றை அமைக்குமாறு நீதிவான் திருமதி.சிறிநிதி நந்தசேகரன் சாவகச்சேரி பொலிஸ் நிலை தலைமைப்பீட பொறுப்பதிகாரிக்கு ஆலோசனை வழங்கினார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த மூவர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளியினை தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தினை நிராகரித்த நீதிவான் குறித்த மூவரையும் தொடர்ந்தும் 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன் நீதிமன்றில் தோன்றிய தலைமைப்பீட பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் இரவு பகல் பாராது மக்களுக்காக அர்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். இவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை நீதிமன்றிற்கு உள்ளது. எனவே வைத்தியசாலை வாசலில் பொலிஸ் காலவரண் ஒன்றை அமைத்து மதுபோதையில் வருபவர்களை சோதனை செய்து உள்ளே செல்ல அனுமதிக்குமாறு நீதிவான் ஆலோசனை வழங்கினார்.

courtf21

Related posts: