சாலை விபத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள்   பலி!

Sunday, October 30th, 2016
நீர்கொழும்புபமுனுகம வீதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் சென்ற மோட்டார் சைக்கிள் காரொன்றில் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் தங்கொடுவ மற்றும் ஆணமடுவ பகுதியைச் சேர்ந்த  சமிந்த சானிக பண்டார (32) மற்றும் அசோக லலித் யசனாயக்க (39) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Fatal-Accident-Graphic

Related posts: