கோவிட்-19 கூட்டு ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான பிராந்திய மட்ட செயற்பாட்டில் இலங்கை பங்கேற்பு!

Wednesday, April 28th, 2021

கோவிட்-19க்கு பிரதிபலிப்பது குறித்த சீனா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அமைச்சர்களுடனான கூட்டு இணையவழி மாநாட்டில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பங்கேற்றார்.

இதன்போது கோவிட்-19 க்கான பிரதிபலிப்பு சார்ந்த ஒத்துழைப்பைப் பலப்படுத்துதல் மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சியை ஊக்குவித்தல் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் அண்மைய அதிகரிப்புக்கு மத்தியிலான வறுமை ஒழிப்பு ஆகியன தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் குணவர்தன, பொருளாதார மீட்சி மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் தேசிய முன்னுரிமைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு நாடுகளுக்கு உதவும் வகையில், கோவிட்-19 தொற்று நோயால் முன்வைக்கப்படும் சவால்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வெளிநாட்டு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஐ.நா. மற்றும் உலக சுகாதார தாபனத்தின் வழிகாட்டுதலின் கீழ், தேவைகளையுடைய நாடுகளுக்கு முக்கியமான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் நிலையாகவும், சமமான அளவிலும் கிடைப்பதனைப் பராமரிப்பதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் எனவும் அமைச்சர் குணவர்தன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்..

அத்துடன் இயற்கை மற்றும் ஏனைய பேரழிவுகளின் போது அவசர தேவைகளை வழங்குதல், தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கருவிகளின் பயன்பாடு மற்றும் கிராமப்புறப் பொருளாதாரங்களில் வறுமை ஒழிப்புக்கான தளங்கள் போன்றன தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரு செயன்முறை மையமான விடயமாக அமைதல் வேண்டும் என பங்கேற்பாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: