சாலை விபத்தில் இருவர் பலி: 9 பேர் படுகாயம்!

இன்று அதிகாலை (26) இடம்பெற்ற சிலாபம் – புத்தளம் பாதையில் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கார் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரில் பயணித்த இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் எனவும், அதே காரில் பயணித்த மேலும் இருவர் மற்றும் வானில் பயணித்த 7 பேருமே காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்கள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவந்துள்ளது
Related posts:
உமா ஓயா திட்டத்தின் பாதிப்புக்களை குறைக்க விசேட திட்டம்!
திருநெல்வேலி - பாரதிபுரம் தொடர்ந்தும் அபாயத்தில்!
வனவள பாதுகாப்பு அமைச்சின் 3 சுற்றறிக்கைகள் இரத்து - மாவட்ட மற்றும் பிரதேச செயலாளருக்கான அதிகாரங்களு...
|
|