சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம்?
Saturday, March 5th, 2016
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியதாகவும் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாக இந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அமைந்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் ஏனைய வருடங்களைப் போலவே இந்த வருடமும் மார்ச் மாதம் இறுதியில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் பேச்சு!
அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடுத்தப்படும் பேரந்துகளுக்கு தண்டப் பணம் அதிகரிப்பு!
விமர்ச்சிப்பதை விடுத்து உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் - ஓட்டமாவடி பிரதேச...
|
|
|
இறந்தவர்களின்’ உடலத்தை எரிப்பதா - புதைப்பதா? அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாள...
நிர்மாணத்துறை பொருட்களின் விலையில் வீழ்ச்சி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப...
சோளச் செய்கையில் இனங்காணப்படாத நோய்த்தாக்ம் - விவசாயத்திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர...


