சாதாரணதரப் பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டையை துரிதப்படுத்தவும்!

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளரிடம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான கடிதம் வலி;வடக்கு விரதேச சபையின் முன்னாள் எதவித் தவிசாளர் எஸ்.சஜீவன் திங்கட்கிழமை எழுதியுள்ளார்.
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையூடாக விண்ணப்பித்த தேசிய அடையாள அட்டை இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் சில பாடசாலைகளின் அதிபர்கள் தேசிய ஆள் அடையாள அட்டை இன்றி பரீட்சை எழுத இடமளிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர் என்னிடம் முறையிட்டுள்ளனர். எனவே தேசிய ஆள் அடையாள அட்டையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோருவதாக முன்னாள் உதவி தவிசாளர் எஸ்.சஜீவன் கோரியுள்ளார். கல்விப் பொதுத்தரரார சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|