தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற அன்று நடந்த தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு!
Wednesday, December 21st, 2016
தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற கடந்த முதலாம் திகதி போக்குவரத்து சபையின் பேருந்துகள் மீது மேற்கொண்ட தாக்குதலினால் காயமடைந்த நபர்களுக்கு போக்குவரத்து அமைச்சு இழப்பீடு வழங்கியுள்ளது.
இதன்படி 4 பயணிகள் மற்றும் பேருந்து பணியாளர்கள் 19 பேருக்கும், பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் நேற்று இவ்வாறு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளாகி தற்போது அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரருக்கு ரூபாய் 50 ஆயிரமும், மற்றைய நபர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம்படி இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

Related posts:
வெள்ளத்தில் மூழ்கும் இலங்கை நாடாளுமன்றம்!
யாழ். மானிப்பாய் வாள்வெட்டுச் சம்பவம்: மேலும் இருவர் கைது
சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பை நிறுவ நிறுவ வர்த்தக அமைச்சு தீர்மானம்!
|
|
|


